• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் சந்திப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சி.மதன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரை பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம்-ஒழுங்கு பிரிவு உதவித் தலைமைக் காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக திருநெல்வேலி மாநகர மேற்கு துணை ஆணையராக இருந்த சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். இதனையடுத்து, அவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திங்கள்கிழமை ( 16.02.2026 ) பொறுப்பேற்றாா். 


இந்த நிலையில்,  பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் வேலுச்சாமி, செயலாளார் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜபெருமாள் தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் சி.மதனை, இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

  • Share on

ஆதனூர் மண்ணில் நடந்த அதிரடி மாட்டு வண்டிப் பந்தயம் - மிரட்டிய சாரதிகள்!

தூத்துக்குடியில் அதிர்ச்சி: வீட்டிற்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

  • Share on