• vilasalnews@gmail.com

ஒரே ஆண்டில் ஒரிரு மாதங்களில் அடுத்தடுத்து 3 எஸ்பிக்கள் மாற்றம்... பரபரக்கும் தூத்துக்குடி காக்கி வட்டாரம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிலம்பரசன், மதன், அபிஷேக் குப்தா என மூன்று பேர் ஒரே ஆண்டில் ஒரிரு மாதங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் தற்போது விவாதப்பொருளாகி உள்ளது.


ஆகஸ்டு மாதம், 2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியில் அமர்ந்த ஆல்பர்ட் ஜான் மிகக் குறுகிய காலத்திலேயே, ஜனவரி மாதம் 2026 ஆம் ஆண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அப்போது நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். 


பின்னர், சுமார் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிலம்பரசன் மாற்றப்பட்டு, அப்போது திருநெல்வேலி மாநகர மேற்கு துணை ஆணையராக இருந்த சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.


தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு தமிழகத்தில் ஆட்சி அமைந்த பின்பு, கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக இருந்த மதன் மாற்றப்பட்டு, புதிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமிக்கப்பட்டார்.


இந்த நிலையில் தான், தற்போது  2 மாதத்திற்குள் மீண்டும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்பி அபிஷேக் குப்தா பணியிட செய்யப்பட்டு, சிவங்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சிவபிரசாத், கர்நாடகா மாநிலம் பெங்களுருவை சேர்ந்தவர். 2016ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று விருதுநகர் ஏ.எஸ்.பி.,யாக பணியை துவங்கினார். பின் மதுரை, சென்னை வண்ணாரப்பேட்டை, அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றினார். பின் மதுரை, தேனி, சிவகங்கையில் எஸ்.பி.,யாக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆல்பர்ட் ஜானும் மிகக் குறுகிய காலத்திலேயே மாற்றப்பட்டார். அவர் மத்திய அரசு பணிக்கு சென்றார்.


ஆல்பர்ட் ஜான் மத்திய அரசுப் பணிக்குச் சென்றது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றே பார்க்கப்படுகிறது. ஆனால், அவருக்குப் பின் சிலம்பரசன் ஐபிஎஸ் ஒரே மாதத்தில் மாற்றப்படுவது, தேர்தலே காரணம் என்று பார்க்கப்படுகிறது.


ஆனால், அடுத்ததாக சி.மதன், அபிஷேக் குப்தா ஆகியோர் அடுத்தடுத்து ஒரே ஆண்டில் ஒரிரு மாதங்கள் இடைவெளியில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் தற்போது விவாதப்பொருளாகி உள்ளது.

  • Share on

வாழை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு தூத்துக்குடி கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!

தவெக தலைவர் விஜய்க்கு மிரட்டல்: விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

  • Share on