தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சிவந்தாகுளம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது, சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரின் மகன் வினோத் (23) என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.