• vilasalnews@gmail.com

சொகுசு காரில் கஞ்சா கடத்திய தூத்துக்குடி பேரூரணி சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2 கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!

  • Share on

நெல்லையில் சொகுசு காரில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த தூத்துக்குடி பேரூரணி சிறை வார்டன் உள்பட 2 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.


நெல்லை மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் கடந்த 10 நாட்களாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றிய ரகசியத் தகவல்களைச் சேகரித்து வந்தனர்.


கஞ்சா விற்பனை கும்பல் நெல்லை மாநகரப் பகுதிக்குள் காரில் வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, நெல்லை டவுன் குற்றாலம் சாலையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை மறித்து சோதனை செய்தபோது, காரில் 2 கிலோ கஞ்சா மற்றும் ₹10 லட்சம் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.


காரில் வந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தமிழரசன் (31), முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த வீரபாகு மகன் நவீன் (25) என்பதும், அவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், தமிழரசன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் வார்டனாகப் பணியாற்றி வருகிறார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.


இதனையடுத்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் மற்றும் நவீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சொகுசு கார், 2 கிலோ கஞ்சா மற்றும் ₹10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் பரபரப்பு : சிவந்தாகுளம் பகுதியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது - 5.5 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல்!

  • Share on