• vilasalnews@gmail.com

ஆதனூர் அருள்மிகு ஸ்ரீ ஜெகவீர மொட்டையசாமி திருக்கோவில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா!

  • Share on

ஆதனூர் அருள்மிகு ஸ்ரீ ஜெகவீர மொட்டையசாமி திருக்கோவில் திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், ஆதனூர் கிராமத்தில், செல்வ விநாயகர், பால விநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்க ஈஸ்வரர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவன், காலபைரவர், ஜலதுர்க்கை, நவக்கிரகங்கள், மற்றும் பரிவார மூர்த்திகளும், கோட்டையில் அமைந்துள்ள வேத நாராயணர்,  உத்தண்டராய சுவாமி, ஜெகவீர மொட்டைய சாமி, இருளப்பசாமி, கருப்பசாமி, பத்திரகாளி, பேச்சியம்மன், மாரியம்மன், லாட சன்னிகர்,  வைரவன், ஜெகவீர சக்கதேவி ஆகிய தெய்வங்களும் அமைந்துள்ள ஆதனூர் அருள்மிகு ஸ்ரீ ஜெகவீர மொட்டைய சாமி ஆலய வளாகத்தில், 


கோவில் திருவிழா காலங்கள் மற்றும் கோவில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, விழாக்கள், விசேஷங்கள் நடத்துவதற்கும் அன்னதானம் வழங்குவதற்காகவும் சமையல் அறை, கழிப்பறை வசதியுடன் கூடிய மண்டபம் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் ஆலய கமிட்டி சார்பாக கட்டப்பட உள்ளது.


இந்த நிலையில், கோவில் மண்டப திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று  ( 23.08.2026 ) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு  மேல் 8.00 மணிக்குள், ஆதனூர் அருள்மிகு ஸ்ரீ ஜெகவீர மொட்டையசாமி திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து, கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


இதில், ஆலயக்கமிட்டி நிர்வாகிகள், ஆதனூர் கிராம ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பரபரப்பு : ரோந்து சென்ற எஸ்.எஸ்.ஐ-யை அரிவாளால் வெட்ட முயன்ற நபர் கைது!

  • Share on