தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்திருக்கிறது.
அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அரசியல் முதிர்ச்சி அடைய இன்னும் சில காலம் ஆகலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் அபத்தமான தரவுகள் அற்ற தவெக எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் பேச்சு அவர்களுக்கு எதிரான விமர்சனங்களை அதிகரிக்க செய்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஓட்டப்பிடாரம் வ.உ.சி பிறந்தாள் விழாவின் போது, செய்தியாளர்களின் சந்திப்பில் நடந்துள்ளது.
வ.உ.சிதம்பரனாரின் 155ஆவது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைந்துள்ள சிலைக்கு தமிழக அமைச்சா்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நேற்று ( 05.09.2026 ) சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அரசு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, வ.உ.சிதம்பரனாரின் வாரிசுதாரா் உ. செல்விக்கு, அமைச்சா்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனா். பின்னா், வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.
தொடர்ந்து அமைச்சர்கள் மதன்ராஜா, மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ஸ்ரீநாத்:-
ஐயா வ.உ.சி அவர்களுடைய நூத்தி ஐம்பாவத்தி என வாய் குழற, ஒரு நிமிஷம் நிமிஷம் என சினிமா நடிப்பில் டேக் வாங்குவது போல, அவரை அவரே ரெடியா ரெடியா என கேட்டுக்கொண்டு, மீண்டும் பேட்டி கொடுக்க தொடரும் போது, அமைச்சருக்கு உதவுவதாக பின்னால் இருந்த சிலர் வ.உ.சியின் பிறந்த நாள் ஆண்டை 144, 154 ன குழப்பி அடித்து கூற, கடைசியா 155 வது பிறந்த நாள் என பதில் வந்து அமைச்சர் ஸ்ரீநாத் பேச முற்படும் போது, கடைசியாக அருகில் நின்ற அமைச்சர் மதன்ராஜாவை ஸ்ரீநாத் பார்க்க, அமைச்சர் மதன்ராஜாவும் 155 என தலையசைத்த பின்னரே அமைச்சர் ஸ்ரீநாத், "ஐயா வ உ சி அவர்களின் 155 வது பிறந்த நாளில் அவர் வாழ்ந்த இந்த வீட்டில் அவருக்கு மரியாதை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார். அமைச்சர் ஸ்ரீநாத்தின் இந்த பேச்சு தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
அதாவது, இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் யாராலும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத ஓர் உன்னதமான உண்மையான விடுதலை போராட்ட வீரர் ஐயா வ.உ.சி அவர்கள். அருடைய பிறந்த நாளை அவர் வாழ்ந்த வீட்டில் அரசு சார்பில் மரியாதை செலுத்த வந்த, வ.உ.சி பெயர் தாங்கிய மாவட்டமாக இருந்து, தற்போது தூத்துக்குடி மாவட்டம் என்ற பெயரோடு இருக்கக் கூடிய மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மண்ணின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவரே, வ.உ.சியின் பிறந்த நாள் எத்தனையாவது ஆண்டு என்று கூட தெரியாமல் அருகில் இருப்பவர்கள் சொல்லிக் கொடுத்துத்தான் பேச வேண்டிய நிலை ஏற்படும் போது, எப்படி அறிவார்ந்தவராக இருந்து மக்களுக்கு நல்லதை செய்வார்? வ.உ.சிக்கு மரியாதை செலுத்த வந்து அவருடைய பிறந்த நாள் ஆண்டு கூட தெரியாமல் இருப்பது என்பது அவமரியாதை செயலாகத்தான் பார்க்கப்பாடுகிறது.
எந்த நிகழ்ச்சிக்கு நாம் செல்கிறோம். அங்கே நாம் செல்லும் முன்பு, நம்மை நாம் எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது போன்ற புரிதலோடு அடிப்படை தரவுகளை கூட தயார் செய்து கொள்ளாமல் செல்லும் இது போன்ற மக்கள் பிரதிநிதிகளால் நமக்கு என்ற நன்மை நடந்து விடப்போகிறது என மக்கள் நொந்து கொள்கின்றனர்.
தூத்துக்குடி துறைமுகம் நகரம் என்பதே அறியாமல் மீண்டும் துறைமுகம் நகரமாக மாற்றுவோம் என்றும், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த பத்திரிக்கையாளர்கள் கோவில்பட்டியில் கேள்வி கேட்ட, இந்த கேள்வியை தூத்துக்குடியில் கேளுங்கள் என்று வினோத பதில் கொடுக்கும் அமைச்சர் ஸ்ரீநாத் போன்றோரிடம், அறிவார்ந்த செயல்களையும் பேச்சுகளையும் எப்படி எதிர்பார்க்க முடியும் என அறிவார்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.