• vilasalnews@gmail.com

தூத்துக்குடி : இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில், ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் குழந்தைகள் உட்பட 7 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (40), தனது மனைவி ரம்யா, குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர்கள் காரில் மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.


அதே வேளையில், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் (63), அவரது நண்பரான வித்தியாசாகர் (63) மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றொரு காரில் திருச்செந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். அந்த வாகனத்தை வித்தியாசாகர் இயக்கியுள்ளார்.


இரு கார்களும் ஆறுமுகநேரி தபால் நிலையம் அருகே உள்ள சாலையைக் கடந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதின. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த விஸ்வநாதனின் கார் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. மற்றொரு காரின் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்து, சாலையின் நடுவிலேயே நின்றது.


இந்த விபத்தில் இரு கார்களிலும் பயணித்த 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களைப் பத்திரமாக மீட்டனர்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆறுமுகநேரி காவல்துறையினர், மீட்பு ஊர்தி  மூலமாக விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் அப்புறப்படுத்திப் போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

ஒரே வீட்டில் இரண்டு மருத்துவர்கள்... தூத்துக்குடி விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகள் அசத்தல் சாதனை : பாஜக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

  • Share on