• vilasalnews@gmail.com

பசுவந்தனையில் சாலையோர ஆக்கிரமிப்பு - முன்னெடுத்த சமூக ஆர்வலர்... முடித்து வைத்த வட்டாட்சியர்!

  • Share on

பசுவந்தனையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சமூக ஆர்வலர் கப்பிகுளம் பாபு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, பசுவந்தனை கைலாசநாதர் கோவில் அருகில் பசுவந்தனை கடம்பூர் செல்லும்  நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையில் ஆக்கிரமிப்பு செய்து திறந்த வெளியில் பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அவ்வப்போது விபத்துக்கள் நடைபெறுவதாகவும், சுகாதாரமற்ற வெயில் மற்றும் மழையில் நனையும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பழங்கள் பொதுமக்கள் வாங்கி உண்பதால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இத்தகைய ஆக்கிரம்பு கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பாக, சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனாரிடம் மனு அளித்தார்


இதனையடுத்து, மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க மண்டல துணை வட்டாட்சியர் மரியாவியாகுல ஜெயா, வருவாய் ஆய்வாளர் நல்லதம்பி, கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, நெடுஞ்சாலைத்துறை ,நில அளவைத் துறை அடங்கிய குழுவை அனுப்பி வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் அளவீடு செய்யப்பட்டு தற்காலிக ஆக்கிரமிப்பு கடை உடனடியாக அகற்றம் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டதின் அடிப்படையில், தற்காலிக பழக்கடை அகற்றப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்பட்டது.


வட்டாட்சியரின் இந்த துரித நடவடிக்கைக்கும், கோரிக்கையை வைத்த சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபுவிற்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  • Share on

அவசரநிலைக் காலத்தில் போராட்டம்... மிசா கைதிலிருந்து தப்பிய அனுபவம் - தூத்துக்குடியில் குடியரசுத் துணைத் தலைவர் பகிர்ந்த சுவாரஸ்ய நினைவுகள்!

  • Share on