தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த, 2001 முதல், 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக புகார் எழுந்தது. தொடர்ந்து, 2006ல் அமைந்த தி.மு.க., ஆட்சியில், 4 கோடியே 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்தாக அவர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்ததன் ஆகிய, ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று (நவ., 3) தீர்ப்பு வழங்கப்படும் என, நீதிமன்ற வழக்கு பட்டியல் விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.