• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் : ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார்!

  • Share on

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் மற்றும் புதிய நியாயவிலைக்கடை கட்டிடத்தை ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் அன்னை விஜி சரவணன் ரிப்பன் வெட்டி குத்துவிக்கேற்றி திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், பிடாநேரி ஊராட்சியில், 2025 - 2026 ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.30.10 இலட்சம் மதிப்பீட்டில் தைலாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற புதிய அலுலக கட்டிடத்தையும்,  


எழுவரைமுக்கி ஊராட்சியில் 2025 - 2026 ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் தோப்பூர் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுலக கட்டிடத்தையும் ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் அன்னை விஜி சரவணன் ரிப்பன் வெட்டி குத்துவிக்கேற்றி திறந்து வைத்தார். 


அதனையடுத்து, 2025 - 2026 ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.9.40 இலட்சம் மதிப்பீட்டில் எழுவரைமுக்கி ஊராட்சி, தேரிப்பனை கிராமத்தில் புதிய நியாவிலைக்கடை திறந்து வைத்த எம்எல்ஏ, பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.


அதே போல, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின், விழுதுகள் அருகாமை சேவை மையத்தை, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் அன்னை விஜி சரவணன் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பணியாளர்கள், தவெக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை!

  • Share on