• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே திடீர் உடல்நலக் குறைவால் டீக்கடை உரிமையாளர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த டீக்கடை உரிமையாளர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த சர்க்கரை நாயக்கரின் மகன் முருகன் (52). இவர் தனது சொந்த ஊரான சூரங்குடியில் டீக்கடை நடத்தி வந்தார்.


இந்நிலையில், சென்னைக்குச் செல்வதற்காக முருகன் சூரங்குடியில் இருந்து விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்குச் செல்ல, ராமேஸ்வரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கிப் பயணித்த அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.


பேருந்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, முருகனுக்குத் திடீரெனக் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த பேருந்து ஓட்டுநர் உடனடியாகச் செயல்பட்டு, விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டார்.


பின்னர், உடல்நலம் பாதிக்கப்பட்ட முருகனை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், அதே அரசுப் பேருந்திலேயே விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.


இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பயணத்தின்போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை ஓட்டுநரும் நடத்துநரும் விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் உயிரிழந்தது சூரங்குடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையை தேடி கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் காட்டம்!

தூத்துக்குடியில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை!

  • Share on