• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை!

  • Share on

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடி 3-வது மைல், கந்தன் காலனி 3-வது தெருவைச் சேர்ந்த சித்திரைவேலின் மனைவி சசிகலா (45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் வசித்து வருகிறார். திருமணமான மகனும் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.


சித்திரைவேல் கேரளாவில் வேலை பார்த்து வருவதால், சசிகலா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில்,  22.10.2026 இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், சசிகலாவை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, சசிகலா அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினைப் பறித்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த சசிகலாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் டவுன் டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சசிகலாவைக் கொலை செய்த நபராக உறவினர் முனீஸ் என்ற விக்னேஷ்வரன் என்பவர் கொலை நடந்த 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்தச் சம்பவத்திற்கான பின்னணி என்ன, நகைக்காகவே கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.


பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த தாலிச் செயினும் பறிக்கப்பட்ட சம்பவம் கந்தன் காலனி பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சசிகலாவின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு வாலிபர் கையில் அரிவாளுடன் வீட்டை விட்டு வெளியேறிய காட்சி பதிவாகியிருந்தது. அக்காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், கொலையாளி சசிகலாவின் உறவினரான தூத்துக்குடி அண்ணா நகர் 7-வது தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் விக்னேஷ் குமார் (எ) முனீஸ் (25) என்பது தெரியவந்தது.


தனிப்படை போலீசார் கொலை நடந்த ஒரே மணி நேரத்தில் அவரைப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 பவுன் நகையும் மீட்கப்பட்டது என்றார்.


முதற்கட்ட விசாரணையில், விக்னேஷ் குமார் தனது சித்தியான சசிகலா வீட்டிற்கு அடிக்கடி சென்று பணம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்றும் மதியம் பணம் கேட்டு சென்றுள்ளார். சசிகலா பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த விக்னேஷ் குமார் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, கழுத்தில் இருந்த 4 பவுன் நகையைப் பறித்துச் சென்றுள்ளார்.


பின்னர், அருகிலுள்ள மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டுத் தனது வீட்டிற்குச் சென்றபோது போலீசார் அவரைச் வளைத்துப் பிடித்தனர். பட்டப்பகலில் குடியிருப்புப் பகுதியில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதே நேரத்தில் குற்றவாளியை 3 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்த அதிவேக நடவடிக்கையும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

விளாத்திகுளம் அருகே திடீர் உடல்நலக் குறைவால் டீக்கடை உரிமையாளர் உயிரிழப்பு!

  • Share on