• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மாணவர்களுக்குக் கல்விக் கடன் முகாம் : கனிமொழி எம்.பி., கீதாஜீவன் பங்கேற்பு!

  • Share on

உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் வங்கிக் கடன் வசதிகளை எளிதாகப் பெறும் நோக்கில், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.


உயர்கல்விக்கான செலவுகளைச் சமாளிக்க முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில், கல்விக் கடன் தொடர்பான வாய்ப்புகளை அறிந்துகொள்வதற்கும், கடன் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்வதற்கும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.


முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய கனிமொழி எம்.பி., தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் உயர்கல்விக்குத் தேவையான நிதி உதவியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை இந்த முகாம் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார். கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, முகாமில் பங்கேற்று உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் குரு சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் மகேஷ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ஜெயந்த், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் ஆனந்த் கணேசன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகளும், பல்வேறு அரசுத் துறை அலுவலர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  • Share on

சாத்தான்குளத்தில் பைக் ரேஸ்: 4 பேர் கைது – 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

  • Share on