தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முன்னாள் நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் படு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
தூத்துக்குடியில் பேனர் கட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முன்னாள் நிர்வாகியான, சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் 40 வயது பாலமுருகன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி சேதுபாதை ரோடு அ.சண்முகபுரம் பகுதியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்த போது இக்கொடூர சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலை தொடர்பாக மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தவறான கருத்து நிலவுகிறது. மாவட்டத்தில் எந்த கொலை சம்பவம் நடந்தாலும் காவல் துறை சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தற்போது 10 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. மாவட்டத்தில் கொலை வழக்குகளை குறைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்துள்ளோம். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கிறது. அதனை தொடர்ந்து பராமரிப்போம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன். என தொடர் கொலைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவதைத் தொடர்ந்து ஒரிரு தினங்களுக்கு முன்பு மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்திருந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடியில் மீண்டும் ஒரு கொலை அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.