• vilasalnews@gmail.com

தூத்துக்குடியை அதிர வைத்த அடுத்த சம்பவம்... லாரிசெட் உரிமையாளர் வீட்டில் தாக்குதல்!

  • Share on

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்பட்ட தாமிரக் கசடு மணல்கள் எடுப்பதில் இரண்டு லாரி செட் உரிமையாளர்களுக்கு இடையே தகராறில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை கூலிப்படையை வைத்து கொலை செய்யும் நோக்கோடு நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து வீடு மற்றும் காரை  அடித்து நொறுக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 


மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்பட்ட தாமிரக் கசடுகள் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள புதுக்கோட்டை உப்பாற்று ஓடைக்கரைகள் உட்பட, மாவட்டத்தின் 19 முக்கிய இடங்களில் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளன.


பலர் இந்த மணலை ஆலையிடமிருந்து வாங்கி தங்களது தனியார் பட்டா நிலங்களிலும் கொட்டி வைத்துள்ளனர். அவ்வாறு ஆலையிடமிருந்து வாங்கிய மணலை தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தூத்துக்குடி துறைமுக பைபாஸ் சாலையில் தனது பட்டா நிலத்தில் மணலை கொட்டி வைத்துள்ளார். இவ்வாறு தனியார் நிலங்களில் கொட்டப்பட்டுள்ள இந்தக் கழிவு மணல்கள் பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு அதிக லாபத்துடன் விற்பனையும் நடைபெற்ற வருகிறது.


இந்த மணலை எடுப்பதில் தூத்துக்குடி பிஎன்டி காலனி 8வது தெருவை சார்ந்த SNR லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வரும் சிவா என்பவருக்கும் ஏற்கனவே அந்த மணலை எடுத்து விற்று வந்த சிப்காட் பகுதியில் மாரியம்மன் லாரி செட் நடத்தி வரும் வெள்ளத்துரை மற்றும் அவரது கூட்டாளி சந்திரசேகர் தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு SNR லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வரும் சிவா என்பவர் துறைமுக பைபாஸ் சாலையில், பட்டா நிலத்தில் மணலை இருப்பு வைத்துள்ள தொழிலதிபரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மணலை வாங்கி விற்பனை செய்து வந்த நிலையில், ஏற்கனவே அதே தொழிலதிபரிடம் மணலை எடுத்து வந்த வெள்ளத்துரை தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


பின்னர் மணலை எடுப்பதற்காக அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவாவின் ஜேசிபி ஹிட்டாச்சி இயந்திரத்தை வெள்ளத்துரை தரப்பினர் தீவைத்து எரித்தும் அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து சிவா தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வெள்ளத்துரை மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் நேற்று ( நவ.,2 )  பி அன் டி காலணியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் வந்த சிவா காரை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்ற பத்து நிமிடத்திற்குள் வீட்டிற்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கையில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிவாவை கொலை செய்ய முயன்றுள்ளனர்.


அவர் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி சென்றதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை அந்த கும்பல் அடித்து நொறுக்கியதுடன் அவரது மனைவி திவ்யாவின் கழுத்தில் அரிவாளை வைத்து உனது கணவனை நாங்கள் செய்யும் தொழிலுக்கு போட்டியாக வரக்கூடாது என ஆபாசமாக பேசி வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கிதோடு வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சிவாவின் காரையும் அடித்து நொறுக்கி விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


இதைத்தொடர்ந்து சிவாவின் மனைவி திவ்யா தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு, மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆகியோர் நடந்த சம்பவங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து சிவாவின் மனைவி திவ்யாவிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் முடிக்கி விடப்பட்டனர்.


ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

விளாத்திகுளம் அருகே அதிமுக பிரமுகர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு : 6 பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on