• vilasalnews@gmail.com

ஒட்டுடன்பட்டி செல்லும் சாலை படுமோசம்... சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அவதி!

  • Share on

மிகவும் மோசமான நிலையில் காணப்படும் புளியம்பட்டியில் இருந்து ஒட்டுடன்பட்டி கிராமத்திற்குச் செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக விடுத்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புளியம்பட்டியில் இருந்து ஒட்டுடன்பட்டி கிராமத்திற்குச் செல்லும் முக்கிய தார்ச்சாலை தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை முழுவதும் சேதமடைந்து, குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் அப்பகுதி மக்கள் அன்றாடப் பயணங்களுக்குப் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.


குறிப்பாக, மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில இடங்களில் சாலையின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.


இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் சாலையைச் சீரமைக்கத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படாததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


எனவே, பொதுமக்களின் போக்குவரத்து சிரமத்தை உணர்ந்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுடன்பட்டி கிராம மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

  • Share on

தி.மு.க., மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்பு!

  • Share on