தூத்துக்குடி சிவன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று நவ., 16ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத்தொடார்ந்து, தவெக நிர்வாகியும், ஹரிஸ்மா கோல்டு பைனான்ஸ் அதிபருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4000 பேருக்கு மாலை பிரம்மாண்ட அன்னதானம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கரராமேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 10ம்தேதி தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு வரும் 9ம்தேதி மாலை 7 மணிக்கு முருகன் சன்னதி முன்பாகக் காப்புக்கட்டுதல் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, 10ம்தேதி காலை 7.25 மணிக்குக் கும்ப பூஜையும், 10.25 மணிக்குச் சிறப்பு அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலை 7 மணிக்கு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி வீதிஉலா எழுந்தருளலும், இரவு 9.15 மணிக்கு ஆறுமுக அர்ச்சனையும் நடைபெற்றன.கந்த சஷ்டி திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாக 15ம்தேதி மதியம் 12.15 மணிக்கு ஆறுமுக அர்ச்சனையும், மாலை 4 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 4.25 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதைதொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பானகம் அருந்தித் தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். இன்று நவம்பர் 16ம்தேதி காலை 7.05 மணிக்கு ஸ்ரீதெய்வானை அம்பாள் தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 4.25 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தபசு மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருதலும், மாலை 6.05 மணிக்கு மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெற உள்ளது
தொடர்ந்து, இரவு 8 மணிக்குச் சிவன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, கோயில் கலையரங்கில் நவ.9 முதல் 19ம்தேதி வரை 10 நாட்களுக்கு ஆன்மீக பக்திச் சொற்பொழிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், சிவன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்பாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் உள்ள சைவவேளார் திருமண மண்டபத்தில் வைத்து, மாலை 6 மணிக்கு, தவெக நிர்வாகியும், ஹரிஸ்மா கோல்டு பைனான்ஸ் அதிபருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4000 பேருக்கு பிரம்மாண்ட அன்னதானம் நடைபெறுகிறது. இவ்விழாவில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு திருக்கல்யாண விருந்து உண்டு மகிழ்ந்திட, அன்னதான ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.