• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பரபரப்பு : சிவந்தாகுளம் பகுதியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது - 5.5 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.


இதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 இளைஞர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.


இதையடுத்து, காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்த 5 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் பரபரப்பு : நாட்டு வெடிகுண்டு தயாரித்து 'ரீல்ஸ்' வெளியிட்ட 3 இளைஞர்கள் கைது!

  • Share on