• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா 31ஆம் தேதி தொடக்கம்: முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழா வருகின்ற 31ஆம் தேதி தொங்கி செப்.11 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது. இத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (22.08.2026) அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் 2026 ஆம் ஆண்டு ஆவணி திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்த அலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் 2026 ஆம் ஆண்டு ஆவணி திருவிழா வருகின்ற 31.08.2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 11.09.2026 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது. 

இத்திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கான போக்குவரத்து வசதி, குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார். 

இந்நிகழ்வில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.அருணாச்சலம், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ரா.கௌதம், வட்டாட்சியர் திரு.தங்கமாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

  • Share on

கடைகளில் குழந்தைகள் வேலை செய்தால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை!

  • Share on