• vilasalnews@gmail.com

மகனை வெட்டிக்கொலை செய்த தந்தை கைது : எப்போதும் வென்றான் அருகே பரபரப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே, தினமும் மதுபோதையில் வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்துவந்த மகனை, ஆத்திரமடைந்த தந்தையே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எப்போதும் வென்றான் அருகேயுள்ள ஆதனூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவரது 21 வயது மகன் கருப்பசாமி. இவர் எந்த வேலைக்கும் செல்லாமல், நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, தந்தை மாரிமுத்துவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


மகனின் தொடர் தொல்லை மற்றும் தகராறால்  ஆத்திரமடைந்த மாரிமுத்து, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிவாளை எடுத்து கருப்பசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எப்போதும் வென்றான் காவல் நிலையப் போலீசார், உயிரிழந்த கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தந்தை மாரிமுத்துவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

சொகுசு காரில் கஞ்சா கடத்திய தூத்துக்குடி பேரூரணி சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2 கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!

  • Share on