• vilasalnews@gmail.com

தவெக தலைவர் விஜய்க்கு மிரட்டல்: விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

  • Share on

தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யை மிரட்டும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த சனிக்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், சட்டப்பேரவை மற்றும் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

மார்க்கண்டேயனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பரவலான விமர்சனங்களுக்கும் உள்ளானது.

மார்க்கண்டேயனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் 3 முக்கிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது:

இதனைத் தொடர்ந்து, விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயன் தரப்பில் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் இன்றே ஜாமீன் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த திமுகவினர் ஏமாற்றம் அடைந்தனர்.

அதேவேளையில், மார்க்கண்டேயனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் ஆய்வு செய்த நீதிபதி சுமதி, அதனையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

  • Share on

ஒரே ஆண்டில் ஒரிரு மாதங்களில் அடுத்தடுத்து 3 எஸ்பிக்கள் மாற்றம்... பரபரக்கும் தூத்துக்குடி காக்கி வட்டாரம்!

பக்கிள் ஓடை பணியால் குடிநீர் குழாயில் உடைப்பு: குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த மேயர் அறிவுறுத்தல்!

  • Share on