• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அதிர்ச்சி: வீட்டிற்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் இளம்பெண் ஒருவரைத் தாக்கிவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வியாபாரியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் இசக்கி ராஜா. இவருடைய மனைவி இசக்கியம்மாள் (26). கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இசக்கியம்மாள் தனது வீட்டில் மாவு அரைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மணிவாசி என்ற ஊரைச் சேர்ந்த மகாராஜன் (50) என்பவர் திடீரென இசக்கியம்மாளின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வியாபாரியான இவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் இசக்கியம்மாளைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.


இசக்கியம்மாளின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதைக் கண்டு பயந்துபோன மகாராஜன், அங்கிருந்து தப்பித்துத் தனது வீட்டிற்கு ஓடினார். அங்கு அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மயங்கிக் கிடந்தார். படுகாயமடைந்த இசக்கியம்மாள் மற்றும் விஷம் குடித்த மகாராஜன் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை மகாராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண்ணுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இச்சம்பவம் குறித்து கயத்தாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மகாராஜன் எதற்காக அந்தப் பெண்ணைத் தாக்கினார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் சந்திப்பு!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் மறியல்!

  • Share on