• vilasalnews@gmail.com

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் மறியல்!

  • Share on

தூத்துக்குடியில் 2021-ஆம் ஆண்டு தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தீவிரமான சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பின்வரும் 10 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசுப் பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.


தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாநிலத் துணை அமைப்பாளர் கனகவேல் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள், திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.


இந்த மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மத்தியபாகம் போலீசார், பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாகக் கூறி, ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் அதிர்ச்சி: வீட்டிற்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல்: கோலாகலத் திறப்பு விழா!

  • Share on