• vilasalnews@gmail.com

ஆதனூர் மண்ணில் நடந்த அதிரடி மாட்டு வண்டிப் பந்தயம் - மிரட்டிய சாரதிகள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூர்  கிராமத்தில் 35 வது ஆண்டு மஹாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 


தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, மதுரை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து 70 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.


ஆதனூர் - எப்போதும் வென்றான் சாலையில் பூஞ்சிட்டு, தேன்சிட்டு என்று இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை ஸ்ரீஜெகவீரமொட்டையசாமி ஆலக்குழு நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.


இப்போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை நெடுகிலும் கைதட்டி மாட்டு வண்டி வீரர்களை உற்சாகப்படுத்தி ரசித்தனர். முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள், சாரதி, பின்சாரதிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டது. 


இதற்கான ஏற்பாடுகளை, ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படையினர், ஸ்ரீஜெகவீரமொட்டையசாமி ஆலக்குழுவினர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • Share on

47 வருட ஆக்கிரமிப்பு காலி! மேயரின் அதிரடி ஆய்வில் சிக்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி; தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் சந்திப்பு!

  • Share on