• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கையெழுத்து இயக்கம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 சுயக் கணக்கெடுப்பு உதவி மையம், செல்பி பாயிண்ட், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: "இந்தியா முழுவதும் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகக் குடும்பங்களுக்கான சுய-கணக்கெடுப்பு விருப்பப் பதிவு 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறுகிறது.

அதனடிப்படையில், சுய கணக்கெடுப்பு தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் உதவி மையங்கள், விழிப்புணர்வுச் செல்பி பாயிண்ட், கையெழுத்து இயக்கம் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வரும் 31.07.2026 வரை se.census.gov.in என்ற இணையதள முகவரியில் உள்நுழைந்து, தங்களது குடும்பச் சுய விவரங்களை எளிதாகப் பதிவேற்றம் செய்து 12 இலக்கச் சுய-கணக்கெடுப்பு ஐடி-யைப் (ID) பெற்றுக் கொள்ளலாம்.

சுயக் கணக்கெடுப்பு விவரங்களைப் பதிவேற்றம் செய்வதன் மூலம், கணக்கெடுப்பாளர்கள் நேரடி கள வருகையின் போது இச் சுய கணக்கெடுப்பு ஐடி-யைச் சேகரித்துத் தரவைச் சரிபார்ப்பதற்கு எளிதாக அமையும். எனவே, பொதுமக்கள் அரசு வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) இரமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கல்யாணசுந்தரம், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் தில்லைப்பாண்டியன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு வழிகாட்டுதல் முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!

  • Share on