தூத்துக்குடியின் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், நாளை 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி பக்தர்களின் வசதிக்காக நான்கு கால பூஜைகளுக்கான கால அட்டவணையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதல் கால பூஜை-இரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை. இரண்டாம் கால பூஜை-இரவு 11.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை. மூன்றாம் கால பூஜை-அதிகாலை 01.00 மணி முதல் 02.00 மணி வரை. நான்காம் கால பூஜை-அதிகாலை 03.00 மணி முதல் 05.00 மணி வரை என நான்கு கால பூஜைகள் நிறைவடைந்த பின், திங்கட்கிழமை அதிகாலை 05.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், அதனைத் தொடர்ந்து திருவனந்தல் மற்றும் காலசந்தி பூஜைகளும் நடைபெற உள்ளன.
சிவராத்திரி முன்னிட்டு அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் வரிசையில் நின்று அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்யத் தேவையான குடிநீர், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
சிவராத்திரி அன்று விரதமிருந்து இந்த நான்கு கால பூஜைகளிலும் பங்கேற்பது சிறப்பான பலன்களைத் தரும் என ஆன்மீகப் பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர்.




