• vilasalnews@gmail.com

ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையாவின் அதிரடி நடவடிக்கை: பயனாளிகள் முகத்தில் புன்னகை!

  • Share on

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி தாளமுத்துநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை வகித்து, மாப்பிள்ளையூரணி ஊராட்சியைச் சேர்ந்த மாதா நகர், ஆனந்த் நகர், ஜேசு நகர், சமீர்வியாஸ் நகர், ஆரோக்கியபுரம், பாலதாண்டாயுத நகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 560  பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் TTC. ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி  அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தகர் அணி பிளோமின்ராஜ், மாவட்ட இளைஞரணி ஸ்டாலின், ஒன்றிய இளைஞரணி நெல்சன், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி ராஜேந்திரன், மகளிரணி ஆரோக்கியமேரி, கிளைச் செயலாளர்  ஜேசுராஜ் உள்ளிட்ட திமுக  நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


நீண்ட கால கோரிக்கையான இந்த பட்டாக்கள் தற்போது வழங்கப்பட்டிருப்பதால், அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி... முழு விவரம்!

கரைவேட்டியை மாற்றிய 'கருப்பூர் சீனி'... விளாத்திகுளம் எம்.எல்.ஏ முன்னிலையில் 300 பேருடன் திமுகவில் இணைந்த பரபரப்பு பின்னணி!

  • Share on