ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பூர் சீனி (எ) ராஜகோபால் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் மார்கண்டேயன் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
இந்த நிகழ்வில் ஓபிஎஸ் அணியின் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சின்னத்துரை, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சொரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், விளாத்திகுளம் நகரச் செயலாளர் கணேசன், ஒன்றிய நகரச் செயலாளர்கள் மற்றும் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்களும் திமுகவின் கொள்கைகளை ஏற்றுத் தங்களை இணைத்துக் கொண்டனர்.
புதிதாக இணைந்த நிர்வாகிகளை வரவேற்கும் நிகழ்வில் விளாத்திகுளம் மற்றும் புதூர் ஒன்றியங்களைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், மும்மூர்த்தி, செல்வராஜ், ராதாகிருஷ்ணன், பேரூராட்சி செயலாளர் வேலுச்சாமி, நெசவாளர் அணி துரைப்பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், அயலக அணி அழகுராஜ் மேலும், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர், கரண்குமார், ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் இளைஞரணி, மாணவர் அணி நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




