• vilasalnews@gmail.com

தமிழகம் முழுவதும் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: தூத்துக்குடி ஆட்சியரிடம் கோரிக்கை!

  • Share on

புனித வெள்ளியன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு ஆவன செய்ய வேண்டும் என தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையிலான குழுவினர், ஆயர் சார்பிலான கோரிக்கை மனுவை வழங்கினர். 


அதில், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் புனித வெள்ளி, கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான தியாக நாளாகும். அன்று ரத்த தானம், ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்ற அறப்பணிகளில் மக்கள் ஈடுபடுகின்றனர். டெல்லி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே புனித வெள்ளியன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன.


தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தி, மிலாடி நபி மற்றும் வள்ளலார் நினைவு தினங்களில் மதுக்கடைகள் அடைக்கப்படுவதைப் போல, புனித வெள்ளியையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும். சிறுபான்மையினர் நல ஆணையம் மற்றும் மதுவிலக்கு இயக்கங்கள் வழியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இக்கோரிக்கை தமிழக அரசுக்குத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருவதை ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மக்களின் சமய மற்றும் கலாச்சார விழாக்களின் புனிதத்தைப் பாதுகாக்க, தமிழக அரசு இக்கோரிக்கையை ஏற்று முதலமைச்சருக்குப் பரிந்துரைக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசின் மதுவிலக்கு தொடர்பான மறுவாழ்வு மையங்கள் மற்றும் கடைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள அவர், இந்த ஆண்டும் ஏப்ரல் 3-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  • Share on

கரைவேட்டியை மாற்றிய 'கருப்பூர் சீனி'... விளாத்திகுளம் எம்.எல்.ஏ முன்னிலையில் 300 பேருடன் திமுகவில் இணைந்த பரபரப்பு பின்னணி!

47 வருட ஆக்கிரமிப்பு காலி! மேயரின் அதிரடி ஆய்வில் சிக்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி; தூத்துக்குடியில் பரபரப்பு!

  • Share on