தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தூத்துக்குடியில் மாநகராட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி கிருஷ்ண முரளி எம்எல்ஏவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தென்காசி வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளராக திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடாவுமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்வின் போது, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டாக்டர் சிவானந்தா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மேற்கு பகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், வட்டச் செயலாளருமான தூத்துக்குடி மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.




