• vilasalnews@gmail.com

தவெகவில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் தூத்துக்குடி பெண்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் நியமிக்காமல் தலைமை காலம் தாழ்த்தி வரக் கூடிய சூழலில், துணைப் பொதுச்செயலாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த சுபத்ரா முருகன் என்பவரை தவெக தலைமை நியமித்திருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ஆம் தேதி பிரமாண்டமாக நடந்தது. தொடந்து மதுரையில் இரண்டாவது மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாடுகளில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.


மாநாடுகளில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தனது முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினர். திருச்சியில் தவெக தொண்டர்கள் அவருக்கு மிக உற்சாக வரவேற்பு அளித்தனர். திரும்பும் திசையெங்கும் அவரது ரசிகர்கள் புடை சூழ விஜய் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்து உரையாற்றினார்.


இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்டோபர் 11ஆம் தேதி தூத்துக்குடிக்கு வருகிறார். இதனையடுத்து, காவல்துறையிடம் அனுமதி கோரி கட்சி நிர்வாகிகளான அஜிதா ஆக்னல் தலைமையில் ஒரு தரப்பினர் விவிடி சிக்னல் மற்றும் அண்ணா நகர் ஆகிய இரு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர்களான, முன்னாள் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ டேவிட் செல்வின், ஜேகேஆர் முருகன், எஸ்டிஆர் சாமுவேல் மற்றும் பிரைட்டர் ஆகியோர் விவிடி சிக்னலில் மட்டும் அனுமதி கோரியுள்ளனர்.


இரண்டு மனுக்களையும் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஆய்வு செய்த பின்னர் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்னும்  மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாததே இத்தகைய கோஷ்டி பூசலுக்கு காரணம் என உட்கட்சி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இத்தகைய சூழலில், ஜேகேஆர் பில்டர்ஸ், ஜேகேஆர் சிட்ஸ், ஜேகேஆர் மெட்டீரியல்ஸ், ஜேகேஆர் ஹவுசிங், ஜேகேஆர் லேண்ட் புரோமோட்டர்ஸ் என பல்வேறு தொழில் நிறுவனங்களை தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் கால் பதித்துள்ள ஜேகேஆர் குரூப்ஸ்ன் உரிமையாளர் முருகன் என்பவரது மனைவி சுபத்ரா முருகன், தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக தன்னை நியமனம் செய்த கட்சி தலைவர் விஜய்க்கும், பரிந்துரை செய்த பொதுச் செயலாளர் ஆனந்த்திற்கும் நன்றி தெரிவித்து நாளிதழில் விளம்பரம் செய்துள்ளார். 


தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் நியமிக்காமல் தலைமை காலம் தாழ்த்தி வரக் கூடிய சூழலில், துணைப் பொதுச்செயலாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த சுபத்ரா முருகன் என்பவரை தவெக தலைமை நியமித்திருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

முதலிடம்... இலக்கை நிறைவு செய்து சாதித்த தூத்துக்குடி!

கிருஷ்ண முரளி எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற வழக்கறிஞர் மந்திரமூர்த்தி!

  • Share on