ஓட்டப்பிடாரம் அருகே தண்ணீர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் புவனேஷ் (20), இவர் நேற்று ( ஆக.,16) மதியம் பசுவந்தனை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, புற்று முருகன் கோவில் அருகே உள்ள தோட்டத்தில் தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மண்பாதையில் இருந்து பசுவந்தனை பிரதான சாலையில் ஏறி திருப்பும் போது பைக்கும் லாரியும் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த புவனேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த .ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து தண்ணீர் லாரியை ஓட்டி வந்த வேப்பலோடை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ஆனந்த முருகவேல் மகன் மாணிக்கராஜ் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



