தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை ( ஆக.,18 ) நடக்கிறது என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் ,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 13ம் தேதி சென்னையில் திமுக தலைவரும் முதல் வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் திமுக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை ( ஆக., 18ஆம் தேதி ) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடக்கிறது.
மாநில அணி துணை செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




