அம்பாசமுத்திரம் அருகில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தூத்துக்குடி வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி முத்தமாள்காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன்சூர்யா (28). இவர் சென்னையில் மென்பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஹரிணி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் இவர் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள நதியுண்ணி கால்வாய் அணைக்கட்டு பகுதியில் குளிப்பதற்காக இன்று ( ஆக.,16;) மதியம் குடும்பத்தோடு சென்று இருந்தார். அங்கு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நீரில் மூழ்கிய பொன்சூர்யாவை தீவிரமாக தேடிய நிலையில் அவர் சடலமாக மீட்டனர். தொடர்ந்து பொன்சூர்யா உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமணைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த பொன்சூர்யா, ரேக்ளா பந்தய காளைகளின் உரிமையாளர்களில் தமிழகத்தில் முதன்மையானவர்களில் ஒருவரும், தூத்துக்குடி மாவட்ட வீர விளையாட்டு கழகத்தின் மாவட்ட செயலாளருமான மெடிக்கல் விஜயகுமார் மகன் என்பது குறிப்பிடதக்கது.



