• vilasalnews@gmail.com

லஞ்சம் வாங்கி மீண்டும் சிக்கிய விஏஓ கைது... தூத்துக்குடியில் பரபரப்பு!

  • Share on

எட்டயபுரம் அருகே இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் மாரீஸ்வரி என்பவர் இறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ரூ.3500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. 


இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத மாரீஸ்வரி இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் மாரீஸ்வரி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை அலுவலகத்தில் சந்தித்து வழங்கியுள்ளார். 


அப்போது, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் 2012ல் கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலராக இருந்த போது பால் வியாபாரியிடம் பட்டா மாற்றம் தொடர்பாக ரூ.3000 லஞ்சம் பெற்றது தொடர்பாக லஞ்சம் ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

  • Share on

கையில் தேசிய கொடி... கருங்குளம் வடக்கு ஒன்றிய பாஜகவின் தேசப்பற்று!

தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தூத்துக்குடி வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on