• vilasalnews@gmail.com

திக் திக் நிமிடம்.. குடியிருப்புப் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

  • Share on

கோவில்பட்டியில் குடியிருப்புப் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே நாகம்பட்டியைச் சேர்ந்தவரின் டேங்கர் லாரியை, வடக்கு கைலாசபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் ஓட்டி வந்தார். அவர், சென்னையில் டேங்கர் லாரியில் பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொண்டு கழுகுமலைக்கு நேற்று அதிகாலை வந்தார். அங்குள்ள விற்பனை நிலையத்தில் இறக்கிவிட்டு பசுவந்தனைக்கு லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.


அப்போது, திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியை அடுத்த தோணுகால் விலக்கு அருகேயுள்ள அணுகு சாலையில், லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நடைமேடையை சேதப்படுத்தியபடி மரத்தில் மோதி, குடியிருப்புப் பகுதியிலுள்ள மின்கம்பம் முன் கவிழ்ந்தது. 


இதில், டேங்கரிலிருந்து பெட்ரோல், டீசல் கசிந்து வெளியேறியது. ஆறுமுகசாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தொடர்ந்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், தீயணைப்பு நிலையத்தினர் வந்து பெட்ரோல், டீசல் வெளியேறாமலிருக்கவும், தீவிபத்து நிகழாமலிருக்கவும் ரசாயன நுரையை பீய்ச்சியடித்தனர். பின்னர், கிரேன்கள் மூலம் லாரியை அப்புறப்படுத்தப்பட்டது. 


இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதி அருகே நேரிட்ட விபத்தால் மக்கள் மிகுந்த அச்சமடைந்த நிலையில், மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்றதால் பொதுமக்கள் அச்சநிலையில் இருந்து மீண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் மலிவு விலையில் 3 வேளையும் சைவ & அசைவ உணவு வந்துவிட்டது!

தூத்துக்குடியில் தொடங்கியது நெய்தல் 2025 கலை திருவிழா!

  • Share on