• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தொடங்கியது நெய்தல் 2025 கலை திருவிழா!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தின் பண்பாடு, பாரம்பரியம், கலை, நாகரீகத்தைப் பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நெய்தல் கலைவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நெய்தல் கலைவிழா ஜூன் 13, 14, 15ஆம் தேதிகளில் வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழா கோலாகலமாக இன்று மாலை தொடங்கியது.


இந்த நெய்தல் கலை விழாவில் வில்லுப்பாட்டு, பறையாட்டம், சிலம்பாட்டம், துடுப்பாட்டம், கரகாட்டம், இசைக்கச்சேரி, தெருக்கூத்து, குச்சி ஆட்டம் என மக்களைக் கவரும் வகையில் பல தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


முதல் நாளில் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியின் மங்கல இசை, தொடக்க விழா, சமர் கலைக்குழு, அபிநயா நிருத்தாலய நடன பள்ளியின் பரதநாட்டியம், பால் ஜேக்கப்பின் ஃபங்கி போதி, தொடக்க விழா இசை, சோல்டவுட் இசைக்குழுவின் ஒளி இசை இசைக்குழு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


இரண்டாம் நாளான ஜூன் 14ஆம் தேதி தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு, வள்ளியூர் அபிநய கீதம் பல்சுவை கலை நிகழ்ச்சி, குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு, ஜமீன் கோடாங்கிப்பட்டி, கொங்கு பண்பாட்டு மையத்தின் பெருஞ்சலங்கையாட்டம், விழுப்புரம் மாலன் மாற்றுத்திறனாளிகள் மலர் கம்பம் குழு, காஞ்சிபுரம் விவேகானந்தா கிராமிய கலைக்குழு, சூப்பர் சிங்கர் ஷாம் விஷாலுடன் இணைந்து மெட்ராஸ் ஜங்ஷன் இசைக்குழுவின் ஒளி இசை இசைக்குழு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


மூன்றாம் நாளான ஜூன் 15ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியின் மங்கல இசை மற்றும் நடனம், நெய்தல் கலைக்குழுவின் பல்வகை நாட்டுப்புற இசை, அந்தியூர் கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, தூத்துக்குடி உவரி களியல் கலைக்குழு, உருபாணர் - பண்டைய நாட்டுப்புற இசைக்கருவிகள் இசைக்குழு நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடகர் மார்லி அந்தோணியின் நிகழ்ச்சி ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


இந்த தொடக்க விழாவில், கனிமொழி கருணாநிதி எம்பி,  அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்கண்டேயன், சண்முகையா, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

திக் திக் நிமிடம்.. குடியிருப்புப் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

தூத்துக்குடியில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் கொள்ளை : 4 பேர் கைது!

  • Share on