தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகர உட்கோட்டம், தெற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிய காவலர் உணவு விடுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு பயன்படும் வகையில் மலிவு விலையில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளும் சுவையுடன் கூடிய சைவம் மற்றும் அசைவம் உணவு விடுதியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தின் முன்பு மரக்கன்று நட்டினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், ஆயுதப்படை ஆய்வாளர் சுனைமுருகன், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



