இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடிகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
தற்போது வரை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் பாஸ்டேக் மூலமாகவோ அல்லது நேரடியாக ரொக்கப் பணம் செலுத்தியோ தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர். ஆனால், விரைவில் இந்த முறையில் மாற்றம் வரவுள்ளது.
இனி சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் பெறுவதை முற்றிலும் நிறுத்திவிட்டு, பாஸ்டேக் அல்லது யு.பி.ஐ போன்ற டிஜிட்டல் முறைகளை மட்டுமே அனுமதிப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்த புதிய டிஜிட்டல் கட்டண முறை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



