தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடைகால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்துகள் விபத்தில் சிக்கினவா? அல்லது அதிவேகத்தில் இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தென்காசியில் ஏற்பட்ட இந்த சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



