• vilasalnews@gmail.com

தூத்துக்குடி - மைசூரு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி - மைசூரு, நாகர்கோவில் - கோவை இரு ரயில்களும் கூடுதல் நிறுத்தத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் திருவிழாவை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் பக்தர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.


அதன்படி, தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16235) வருகிற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும்.


மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.16236) வருகிற ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும். நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் (வ.எண்.16321/16322) இரு மார்க்கங்களிலும் வருகிற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஊஞ்சலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும்.

  • Share on

சபரிமலை பக்தர்களே உஷார்... கேரளா சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை!

தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

  • Share on