• vilasalnews@gmail.com

டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவு!

  • Share on

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் உத்தரவிடப்பட்டது.


மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. வழிபாட்டுத்தலங்கள் பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

  • Share on

செய்தியாளர் To சட்டமன்ற உறுப்பினர் : தவெக எம்.எல்.ஏ ஜெகதீஸ்வரி!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்க்கு வெளிநாட்டு பிரதமர் வாழ்த்து!

  • Share on