• vilasalnews@gmail.com

தேர்தல் வியூக நிபுணர் டூ தமிழக அமைச்சர் : யார் இந்த கீர்த்தனா? விஜய் அமைச்சரவையின் ‘சிவகாசி மகள்’!

  • Share on

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10, 2026) தமிழக முதலமைச்சராகப் பதவியேற்று இருக்கிறார். அந்த விழாவில், அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்த அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் முகம், சிவகாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கீர்த்தனா.


30 வயதே ஆன இந்த இளம் பெண், அரசியல் களத்தில் ஜாம்பவான்களை வீழ்த்தி அமைச்சராக உயர்ந்தது எப்படி? அவரது பின்னணி குறித்த ஒரு பார்வை


சிவகாசி மண்ணின் மகளான கீர்த்தனா, மிகவும் எளிமையான பின்னணியைக் கொண்டவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதமும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை புள்ளியியலும் பயின்றவர்.  புள்ளிவிவரங்களின் மீது இவருக்கு இருந்த ஆர்வம், பிற்காலத்தில் இவரை ஒரு சிறந்த அரசியல் வியூக நிபுணராக மாற்றியது. 2025-26 நிதியாண்டு கணக்கின்படி, இவரது ஆண்டு வருமானம் 6.3 லட்ச ரூபாய் மட்டுமே. இன்னும் திருமணம் ஆகாதவர்.


நேரடி அரசியலில் நுழைவதற்கு முன்பாக, கீர்த்தனா Showtime Consultancy மற்றும் I-PAC போன்ற முன்னணி அரசியல் ஆலோசனை நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகளுக்காக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த அனுபவம் இவருக்கு உண்டு.


அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆழமான புரிதலைக் கொண்டுள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றல் கொண்டவர்.


"அரசியல் என்பது பயப்பட வேண்டிய இடமல்ல; சாதி, பணத்தையும் தாண்டி அனைவரும் பங்கெடுக்க வேண்டிய களம்" என்பதே இவரது தாரக மந்திரம்.


சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட கீர்த்தனாவுக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் என இரு மூத்த தலைவர்களை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால், தனது துடிப்பான பரப்புரை மற்றும் வியூகங்களால் அவர்களை வீழ்த்தி, தவெக-வின் இளம் அமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.


விருதை மகள் கீர்த்தனா என்ற பெயரின் சமூக ஊடகம் வாயிலாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு சாதாரண இளம்  பெண்ணின் சமூக வாழ்க்கை, இன்று தமிழக அமைச்சரவையில் தடம் பதித்திருக்கிறார் சிவகாசி முதல் பெண் மகளாக கீர்த்தனா.

  • Share on

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய் ஆற்றிய உரை இதோ!

செய்தியாளர் To சட்டமன்ற உறுப்பினர் : தவெக எம்.எல்.ஏ ஜெகதீஸ்வரி!

  • Share on