• vilasalnews@gmail.com

மகளிருக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்.. தமிழ்நாடு முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

  • Share on

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் 110 விதியின் கீழ் அறிவித்ததாவது:


அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்.


இதன் மூலம் 1,30,16,104 பேர் பயனடைவர். பெண்களின் வங்கிக் கணக்கில் சிலிண்டருக்கான தொகை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தால் ரூ 4000 கோடி கூடுதலாக அரசுக்கு செலவாகும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறு, குறு வியாபாரிகள், மாற்றுத் திறனாளிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறுவர்.


ஆண்டுதோறும் 3 சிலிண்டர்கள் இலவசம் என்ற திட்டம் வரும் பொங்கல் பண்டிகை முதல் தொடங்கப்படும்.

  • Share on

தமிழக மின்சாரத் துறையில் மாற்றங்கள் : நடைமுறைக்கு வரும் புதிய வசதி!

  • Share on