• vilasalnews@gmail.com

தென்காசி சோகம் மறையும் முன்னே அடுத்த சம்பவம்.. இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து!

  • Share on

திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் கும்மங்குடி பாலம் அருகே திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்தும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.


விபத்தில் காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்களும், பிற வாகனங்களில் வந்தவர்களும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்தில் டிரைவர் உட்பட 8 பேர் பலியான நிலையில் படுகாயம் அடைந்த 3 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.


இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகியது. மேலும் 40 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்து திருப்பத்தூர், மதுரை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தென்காசி அருகே இடைகால் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 7 பயணிகள் உயிரிழந்தனர். 30 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தற்போது சிவகங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

3 நாட்களுக்கு மேல் அதீத காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் : சுகாதாரத்துறை எச்சரிக்கை

  • Share on