கடலாடியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கைப் பந்தயத்தில் வெற்றி இலக்கு நோக்கி காளைகள் சீறி பாய்ந்து சென்றன.
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தேவர் மகாஜன சபைக்கு பாத்தியப்பட்ட, தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் 118 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜை விழா மற்றும் 37 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 8ம் ஆண்டு வருடாபிஷேகம், இவ்விழாவினை முன்னிட்டு ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தய குழுவினர் நடத்தும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம், சின்ன மாடு, பெரிய மாடு, நடு மாடு உள்ளிட்ட மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.
இப்போட்டியில் இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளுடன் பந்தயம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து சென்றன. முதல் நான்கு இடங்களைப் பெறும் காளைகள் உரிமையாளர்கள் மற்றும் பந்தயம் வீரர்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் கிடாய், வெற்றிக்கோப்பைகள் பரிசுகள் வழங்கப்பட்டது.



