• vilasalnews@gmail.com

மின்சார இணைப்பின் பெயர் மாத்தனுமா? பட்டுனு வேலை முடிய வழி இருக்கு!

  • Share on

தமிழகத்தில் முன்பு வீடு, தோட்டம், கடைகள் உள்ளிட்டவற்றை வாங்கும் போது அங்கிருக்கும் பழைய உரிமையாளரின் பெயரில் உள்ள மின் இணைப்பின் பெயரை மாற்ற மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டி இருக்கும். மேலும் இந்த நடைமுறை மிகவும் கடினமாக இருக்கும். இந்த நிலையில் பொதுமக்களுக்கு வீண் சிரமம் மற்றும் அலைச்சலை குறைக்கும் வகையில் ஆன்லைனிலேயே மின் இணைப்பின் பெயரை மாற்றும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் வீடு, நிலம் அல்லது கடை போன்ற சொத்துகளை வாங்கும்போது, அந்த மின்சார இணைப்பின் பெயரையும் புதிய உரிமையாளரின் பெயரில் மாற்றுவது அவசியமாகிறது. இதற்காக இனி மின்சார அலுவலகத்துக்குச் சென்று நேரம் வீணாக்க வேண்டியதில்லை.


இந்த நிலையில், பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் சிரமத்தைப் போக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) தற்போது இந்த பெயர் மாற்ற சேவையை முழுவதும் ஆன்லைனில் வழங்கி வருகிறது.


அந்த வகையில், ஆன்லைனிலேயே மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கான எளிய வழிமுறையைப் பார்க்கலாம்.


முதலில் TANGEDCO வின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tangedco.gov.in அல்லது நேரடியாக https://tnebltd.gov.in என்ற தளத்துக்குச் சென்று, அங்கு Consumer Services அல்லது Apply Online என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, அதில் Name Transfer (Ownership Change) என்பதை கிளிக் செய்யவும்.


புதிய பக்கம் திறந்தவுடன், உங்கள் Service Connection Number (SC No.), பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஆதார் எண் அல்லது மின்னஞ்சல் ஆகியவற்றை உள்ளிடவும். அதன்பின் OTP மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும். விண்ணப்பத்துடன் சில முக்கிய ஆவணங்களை PDF வடிவில் இணைக்க வேண்டும். அவை, சொத்து உரிமை ஆதாரம் - Sale Deed, Gift Deed அல்லது Lease Agreement, விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை முந்தைய உரிமையாளர் கடைசி மின் கட்டண ரசீது, மரணச் சான்றிதழ் (முந்தைய உரிமையாளர் உயிரில் இல்லையெனில்) ஆகியவற்றை இணைக்கவும். முன்பு தேவைப்பட்ட No Objection Certificate (NOC) தற்போது கட்டாயமில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, Name Transfer Fee என்ற கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் பொதுவாக ₹100 முதல் ₹200 வரை இருக்கும். பதிவு முடிந்த பிறகு, Track Application Status பகுதியில் உங்கள் விண்ணப்ப எண் மூலம் முன்னேற்றத்தைப் பார்க்கலாம். சரி பார்ப்பு முடிந்ததும், புதிய உரிமையாளர் பெயர் அடுத்த மின் கட்டண ரசீதில் தானாகவே சேர்க்கப்படும்.

இதில் ஏதாவது உதவி தேவை என்றால், TANGEDCOவின் அதிகாரப்பூர்வ அழைப்பு மைய எண்: 1912 அல்லது cmd@tnebnet.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இப்படி சில எளிய படிகளைப் பின்பற்றுவதன் மூலம், மின்சார அலுவலகத்திற்குச் சென்று நேரம் வீணாக்காமல், வீட்டிலிருந்தபடியே மின்சார இணைப்பு பெயரை ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம். இது அரசு வழங்கும் மிகச் சிறந்த டிஜிட்டல் சேவைகளில் ஒன்றாகும். நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் பலர் இப்போது இதைப் பயன்படுத்தி வருகின்றனர் என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.

  • Share on

கடலாடியில் சீறிப் பாய்ந்த காளைகள்... பரபரப்பான பந்தய களம்!

தவெக தலைவர் விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்!

  • Share on