கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சிதம்பரம் தொகுதி எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
பின்னா் நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது:-
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து வழிபாடு செய்ததுடன், ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று முதலாம் ராஜேந்திர சோழனின் சாதனை குறித்து பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும், ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலைகள் தமிழகத்தில் நிறுவப்படும் என்று பேசியுள்ளது. இந்த தொகுதியின் எம்பியாகவும், மண்ணின் மைந்தனாகவும் பெருமையாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் கூறினார்.



