• vilasalnews@gmail.com

2ஆவது நாளாக அப்பல்லோவில்... எப்படி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று 2 வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். 


முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு முழு ஓய்வு எடுக்க மருத்துவமனை நிர்வாகம் 3 தினங்கள் பரிந்துரைத்துள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் இறுந்தவாறு தனது அலுவலகப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தினமும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்ட 70 வயதான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென லேசான தலைச்சுற்றலை உணர்ந்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது வழக்கமான உடல் பரிசோதனை என்று கூறப்பட்டாலும், பின்னர் தலைச்சுற்றல் காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. 


முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை சபரீசன் உள்ளிட்டோா் மருத்துவமனையில் உடன் உள்ளனர். இந்நிலையில், இந்திய பிரதமா்  நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சரிடம் நலம் விசாரித்திருக்கிறார். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நேரில் சென்று முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.


நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொலைபேசி வாயுிலாக முதலமைச்சரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். மேலும்,  அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தனர். 


இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அவர் மருத்துவமனையில் இருந்தவாறே தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று 2 வது நாளாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும், அவருக்கு வழக்கமான பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன.


  • Share on

சங்கை நெம்பி விட்டேன்... புளங்காகிதம் அடைந்த மதுரை காவலா் கைது

தமிழகத்தில் ராஜ ராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை : பிரதமர் மோடி

  • Share on