• vilasalnews@gmail.com

தேர்தல்களில் ஒற்றுமை; இந்துக்களின் வாக்கு வங்கி... அதிர்ந்த முருக பக்தர்கள் மாநாடு!

  • Share on

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. 


திருப்பரங்குன்றம் மலை, கோவில் பின்னணியில் இருப்பது போன்று இந்த மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டது. மேலும் மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு நடுவில் முருகப்பெருமான் வேலுடன் நிற்கும் பிரமாண்ட சிலை போன்ற வடிவமைப்பும் இடம் பெற்றது.


முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள் வருமாறு:-


1. திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.


2. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்.


3. திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.


4. தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.


5. தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.


6. சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.

  • Share on

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000... முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்!

இப்படியும் ஒரு எம்எல்ஏவா... அசந்த மனுகொடுத்த பொதுமக்கள்!

  • Share on